search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி"

    உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சியில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.
    உடன்குடி:
                  
    திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன்குடி யூனியன் அலுவலகத்திற்கு வந்தார். ஆணையாளர் கருப்பசாமி, என்ஜீனியர் சிவசங்கர், சாலை ஆய்வாளர் சண்முகசுந்தரி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஜெயச்சந்திரா மற்றும் அலுவலர்களுடன் ஆய்வு செய்தார். வெள்ளாளன்விளை முதல் மாநாடு வரை, தண்டுபத்து முதல் மாநாடு வரை உள்பட கிராமபுற சாலைகளை புதியதாக போடுவதற்கும், செம்மறிகுளம் குடிநீர் பிரச்சனை,மெஞ்ஞானபுரம் மருதூர்கரை குடிநீர் பிரச்சனை மற்றும் கிராம பஞ்சாயத்துக்களில் குடிநீர் வசதி, மருதூர்கரை பழுதடைந்த பஸ் நிறுத்த கட்டிடம், தெரு விளக்கு வசதி இல்லாதது உட்பட சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு வேண்டுகோள்விடுத்தார்.

    முன்னதாக உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சிக்கு சென்று அங்கு நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அனைத்து திட்டப்பணிகளையும் உடனடியாக முடிக்க வேண்டுகோள் விடுத்தார். ஆய்வின்போது தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய கழக செயலாளர் பாலசிங், நகர கழக செயலாளர் ஜான் பாஸ்கர், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரவிராஜா, மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஷேக்முகமது, பரமன்குறிச்சி ஊராட்சி செயலாளர் இளங்கோ, மாவட்ட பிரதிநிதிகள் மதன்ராஜ், பிரபாகர், உடன்குடி நகர பொருளாளர் தங்கம், முன்னாள் கவுன்சிலர்கள் முகமது சலீம், அன்வர் சலீம், மகபூப், முன்னாள் நகர செயலாளர் கனகலிங்கம், நகர இளைஞர் அணி செயலாளர் அஜய், மருதூர்கரை தி.மு.க. செயலாளர் லூக்கா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
    ×